கண் திறந்த அம்மனால் பரபரப்பு: அலையென திரண்ட மக்கள்

கண் திறந்த அம்மனால் பரபரப்பு: அலையென திரண்ட மக்கள்

தமிழ்நாட்டில் காட்பாடி கழிஞ்சூர் மாரியம்மன் கோயிலில் மாலை அம்மன் கண் திறந்ததாக பரவிய தகவலால் திடீரென பக்தர்கள் கூட்டம் திரண்டது.

காட்பாடி கழிஞ்சூரில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அம்மன் கண்கள் திறந்ததை பார்த்து பரவசமடைந்தனர்.

மனிதர்களை போன்று கருவிழி, விழிவெண்படலத்துடன் இருந்ததால் காட்டுத்தீ போல் மற்ற ஊர்களுக்கும் தகவல் பரவியது.

இதனால் கூட்டம், கூட்டமாக திரண்ட மக்கள் கோயிலில் அம்மனை பார்த்து பக்தி பரசவத்துடன் வழிபட்டனர்.

அதேபோல், நேற்று காலையும் கண்கள் திறந்து பிரகாசமாக பார்ப்பது போல் இருப்பதாகவும் தகவல் பரவியது.

இதனால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்