திருமலை கந்தளாய் பகுதியில் ஐ.தே.க.வின் கிளை காியாலயம் உடைப்பு

திருமலை கந்தளாய் பகுதியில் ஐ.தே.க.வின் கிளை காியாலயம் உடைப்பு

திருகோணமலை – கந்தளாய் – பேராறு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயம் இனந்தெரியாதோரால் சேதமா க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (7) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் காரியாலயம் கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பேராறு கிழக்கு பத்தாம் வட்டார வேட்பாளருமான என்.எம்.கே.சுபார்கான் என்பவருடையது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்