சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், அடுத்து அஜித்?

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2, மெர்சல், விவேகத்தை தொடர்ந்து சிங்கம்-3 தான் இருந்தது.

தற்போது சிங்கம்-3 தமிழக வசூலை வேலைக்காரன் பின்னுக்கு தள்ளியுள்ளது, வேலைக்காரன் தமிழகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மேலும், விவேகம் ரூ 66 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருக்க, இதையும் வேலைக்காரன் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்