கந்தளாயில் ஐந்நூற்றி பத்து மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூற்றி பத்து மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இருவரை இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று(7) உத்தரவிட்டார்.

கந்தளாய், ஜனசவி மாவத்தை,மற்றும் 91 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 36 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனார். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கந்தளாய் பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கந்தளாய் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்நூற்றி பத்து மில்லிகிராம் போதைப் பொருளை இருவரும் வைத்திருந்த நிலையில் நேற்று(6) மாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் இருவரையும் இன்று(7) பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்