40 வருடங்கள் காணாத வளர்ச்சியைக் கண்டுள்ள கனடா!

கனடா – ஒட்டாவா பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு பின்னர் வேலையில்லாப்பிரச்சினை பாரிய அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 2002 ஆண்டிலிருந்து காணப்படாத வகையிலான வேலைவாய்ப்பு கடந்த வருடம் முதல் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு வேலையின்மை பிரச்சினையானது 6.9 சதவீதத்தால் காணப்பட்டுள்ளது எனவும் கடந்த வருடம் அக்கோபர் மாதத்தில் இது 5.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு கனடாவின் வேலைவாய்ப்பானது 2.3 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுவதோடு, கடந்த 15 வருடங்களில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சி இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 2017ஆம் ஆண்டு புதிய தொழிற்சாலைகள் 3.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், கடந்தவருடம் 422500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவித்தள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில் 25 தொடக்கம் 54 வயதுக்கு உட்பட்டவர்களின் வேலைவாய்ப்பு வீதமானது 1.6 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது எனவும், கடந்தமாதம் 23700 முழுநேர புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்