பிரித்தானிய விமான நிலையங்களில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

பிரித்தானியாவிலுள்ள விமான நிலையங்களில் மதுபான விற்பனை தொடர்பாக, புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களினூடாகப் பயணிகள் பலர், மதுபானம் அருந்துவதன் காரணமாக, விமானங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றன. இந்த அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் பிரித்தானியாவிலுள்ள விமான நிலையங்களில் எவ்வேளையிலும்; மதுபான விற்பனைக்கு அனுமதி இருந்தது.

இந்நிலையில், மதுபான விற்பனை நேரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், இது தொடர்பாகக் கண்காணிக்கப்படுமெனவும், அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, மதுபோதையில் பயணிக்க முற்பட்ட 50 சதவீதமான பயணிகளை கைதுசெய்துள்ளதாக, ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்