மருதமுனை கண்டுகொண்ட வரலாறு காணாத அரசியல் தளம்!

மருதமுனை கண்டுகொண்ட வரலாறு காணாத அரசியல் தளம்!

கல்முனை கிழக்கில் அரசியல் வரலலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள், நேற்று (06) மருதமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது, மேடையில் ஏறி கட்சியின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மருதமுனை கிராம மக்களின் பல்வேறு தேவைகள் தொடர்பில் கண்டறிந்து, அவற்றை இந்த மக்களுக்காக பெற்றுக்கொடுத்ததுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பினை பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்ற ஒரு தலைவராக, மருதமுனை மக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நோக்கியதன் காரணமாக, வரலாறு காணாத ஜனத்திரளுக்கு மத்தியில் அமைச்சர் புடம்போடப்பட்டார்.

மருதமுனை சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் சூழ்ந்து நின்ற மக்கள், தமது தலைவரின் வருகையை தக்பீர் முழக்கம் மற்றும் கரகோஷம் மூலம் வரவேற்றமை மறு அரசியல் வரலாற்றில் ஒரு பதிவாகும். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் மருதமுனை இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் அல்ஹாஜ் நெய்னா
முஹம்மத் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தரும், கல்விமானுமான கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.

இதேவேளை, கட்சியின் தேர்தல் காரியாலயமும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்