கிரிக்கெட் மைதானத்தை அதிரவைத்த சிங்கத்தின் தற்போதைய நிலை!

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானும், இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜயசூரிய ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

ஜயசூரியவிற்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தற்போது ஊன்றுகோலின் உதவியுடன் நடந்து வருகின்றார். அவர் ஊன்றுகோலுடன் நடக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் பலரும் அவருக்கு அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் ஜயசூரிய பழையபடி உடல் தகுதியோடு, குணமடைய வேண்டும் என அவருடைய ரசிகர்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட ஜயசூரியா,  சச்சினுக்கு நிகராக மதிக்கப்பட்ட ஒரேயொரு இலங்கை வீரர் என்பது  என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் ஜயசூரிய கால் உபாதைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவுஸ்ரேலியா செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்