கின்னஸ் சாதனை படைத்த ஈழத்தமிழர்! அரசாங்கம் கொடுக்கும் கௌரவம்

கின்னஸ் சாதனை படைத்த ஈழத்தமிழர்! அரசாங்கம் கொடுக்கும் கௌரவம்

நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அந்தந்த பகுதி கால நிலைக்கு ஏற்ப நீச்சல் தடாகம் போன்ற விளையாட்டுத்துறைக்கான வசதிகளுக்கான திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

யாழ். வல்வட்டித்துறையைச் சேர்ந்த விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் என்ற நீச்சல் வீரர், 1975ஆம் ஆண்டு பாக் நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்தார். அத்துடன், 7 உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஆனந்தனின் சாதனையை கௌரவிக்கும் வகையில், வல்வட்டித்துறையில் நீச்சல் குளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்