விமான நிலையத்தில் நிர்வாணமாக அலைந்த இளைஞரால் பரபரப்பு

விமான நிலையத்தில் நிர்வாணமாக அலைந்த இளைஞரால் பரபரப்பு

தாய்லாந்து விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக அலைந்ததுடன் ஏனைய பயணிகளை மோசமாக திட்டிய சம்பவத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 27 வயது ஸ்டீவ் சோ என்பவரே தாய்லாந்தில் சுற்றுலா சென்றபோது அங்குள்ள விமான நிலையத்தில் நிர்வாணமாக அலைந்து கைதானவர்.

Phuket சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் பகுதியில் நிர்வாணமாக அலைந்த இவர், மனித கழிவுகளை அங்குள்ள ஊழியர்கள் மீதும் வீசியுள்ளார்.

இதில் கலவரமான அப்பகுதியில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் 6 பேர் கொண்ட பாதுகாப்பு காவலர்களால் அவர் வலுக்கட்டாயமாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டார்.

இதனிடையே அவருடன் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் அளவுக்கு அதிகமான வையாகரா எடுத்துக் கொண்டதாகவும், இதனால் சுய நினைவை இழந்து அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரியதுடன், ஏற்படுத்திய சேதத்திற்கு அபராதம் செலுத்தவும் தாம் தயாராக இருப்பதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து Phuket சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துவதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்