புகைப்படத்தைக் காட்டி காதலியை மிரட்டிய காதலன் கைது

புகைப்படத்தைக் காட்டி காதலியை மிரட்டிய காதலன் கைது

 

17 வயதான தனது காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டிய 22 வயதான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மினுவங்கொடை, வத்தேகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் கைத்தொலைபேசியில் தனது காதலியின் நிர்வாணப் புகைப்படத்தை எடுத்துள்ளதுடன் யுவதியை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் திவுலப்பிட்டிய – ஹப்புவலான பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்