கதறி அழுதவாறே தாலி கட்டினேன்

கதறி அழுதவாறே தாலி கட்டினேன்

பீகாரில் அழுது கொண்டே மணப் பெண்ணுக்கு தாலிய கட்டிய மாப்பிள்ளை தப்பி வந்து சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளன.

இந்நிலையில் அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த இளைஞன் வினோத் குமார்  கூறுகையில்,

என்னை Surender Yadav மணப் பெண்ணின் சகோதரர் ஒரு அறையில் அடைத்து வைத்து, திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டினார், தொடர்ந்து அடித்தார், என் தங்கையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி தனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர்.

அப்போது உதவிக்கு யாருமின்றி பரிதவித்தேன், அழுதேன் அதை தவிர வேறு என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை என்று மனவேதனையுடன் கூறியுள்ளார்.

திருமணம் முடிந்தவுடன் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் இருந்தேன், திருமணம் முடிந்த மறுநாள் Surender Yadav-வின் மச்சான் தன்னிடம் வந்து நடந்தது நடந்துவிட்டது, பெண்ணை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அந்த நேரத்தில் நான் உடனடியாக அவருடைய போனை வாங்கி எனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன்.

அதன் பின்னரே எங்கள் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்த போதும் அவர்கள் குற்றவாளிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த பெண்ணையே ஏற்றுக் கொள்ளும் படி கூறுகின்றனர்.

இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளேன், ஆனால் அவர்களோ எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும், மீண்டும் அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் படி கூறுகின்றனர்.

தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் அந்த கும்பலிடல் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்த படி உள்ளன. ஆனால் பொலிசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் குடும்பத்திற்கு பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்