பப்புவா நியூகினியாவில் எரிமலை வெடித்ததில் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பப்புவா நியூகினியாவில் எரிமலை வெடித்ததில் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா, பப்புவா நியூகினியாவின் கடோவர் தீவிலுள்ள எரிமலை வெடித்துள்ளதைத் தொடர்ந்து, சாம்பலைக் கக்குவதால், சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடோவர் தீவிலுள்ள 365 மீற்றர் உயரமான எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை வெடித்துள்ளதைத் தொடர்ந்து மிகத் தீவிரமாகச் சாம்பலைக் கக்கி வருகின்றது. இந்நிலையில், எரிமலைச் சாம்பல் காற்றுடன் பரவுவதால், அம்மலையை அண்டி வசிக்கும் சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, மேற்கு –வடமேற்கு நோக்கிப் பயணிக்கும் விமானப் போக்குவரத்தில் தடையில்லை. ஆனாலும், நிலைமையைக் கவனத்திற்கொண்டு பப்புவா நியூகினியாவிலுள்ள வீவாக் (Wewak) விமான நிலையச் செயற்பாடுகள் நடைபெறுமென, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்