புதிய ஆண்டில் முதன்முறையாக கூடியது தமிழகத்தின் சட்டசபை!

தமிழகத்தின் சட்டசபை இவ் ஆண்டில் முதற்தடவையாக இன்று (திங்கட்கிழமை) ஒன்று கூடியது.

சபாநாயகரின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிவால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம், எதிர்க்கட்சிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற முற்பட்ட போது எதிர்க்கட்சிகள் கூச்சல் எழுப்பி இடையூறு விளைவித்தன.

ஆனால் அதனையும் மீறி ஆளுநர் தனது உரையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் பங்கேற்ற முதல் சட்டசபைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்