மூன்றாவது திருமணமா?: இம்ரான்கான் மறுப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மூன்றவதாக திருமணம் செய்துகொண்டதாக பரவும் செய்திகளுக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டு மே 16 ஆம் திகதி லண்டனைச் சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில், 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8 ஆம் திகதி தொலைக்காட்சித் தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் 3-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று புஷ்ரா மனேகா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்ததாக பாகிஸ்தானின் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து இம்ரான்கானின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், ‘பொதுவாழ்க்கையில் இல்லாத ஒரு பெண்ணை இம்ரான்கானுடன் தொடர்புப்படுத்தி அவருடைய தனிப்பட்ட வாழ்வு என்னும் உணர்வுப்பூர்வமான பிரச்சனையை கற்பனை கலந்த கதைகளாக ஊடகங்கள் பொது அரங்கில் வெளிப்படுத்து கவலைக்குரியது.

ஊடகங்களின் இத்தகையை செயல்கள் அந்த பெண்ணின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பெரிய அழுத்தத்தை உருவாக்கி விடும். இம்ரான்கானின் விருப்பத்துக்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்தால் இதுதொடர்பான அறிவிப்பை இம்ரான் கான் உரிய முறையில் வெளியிடுவார்.

அதுவரையில், அவர்கள் இருவரின் தனிநபர் வாழக்கைக்கான சுதந்திரத்தை ஊடகங்கள் அளிக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்