இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொலை

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொலை

பன்னல – பல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இவர், வைத்துசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர் பன்னல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் என தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்