ஹோட்டல் தீ விபத்தில் 5 பேர் பலி

ஹோட்டல் தீ விபத்தில் 5 பேர் பலி

பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள கலேசிபாளையத்தில் கைலாஷ் எனும் ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டலோடு இணைந்து மதுபான விடுதியும் செயல்பட்டு வந்தது. இங்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் திடீரென தீ பிடித்துள்ளது. கடையில் தீ பிடித்து இருப்பதை கண்ட அவ்வழியாக சென்ற மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது 5 பேர் தீயில் உடல் கருகி பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடையில் வேலை பார்த்த 24 வயது பெண் உட்பட 5 பேர் இரவு அங்கு தங்கி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் விக்டோரியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்