கல்முனை தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியது தலையாய கடமை:முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன்

 கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான ஓய்பெற்ற விவசாய போதனாசிரியர் க.சிவலிங்கத்தை ஆதரித்து நடாத்தப்பட்ட தேர்தல் பிரசார கருத்தரங்கில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில்,
உரலுக்கு ஒரு பக்கம் மட்டுமே அடி விழும் ஆனால் தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி விழும். அதே போன்று தவிலின் நிலையிலையே கல்முனை வாழ் தமிழர்கள் உள்ளனர். அடக்கு முறைகள், நில ஆக்கிமிப்புக்கள் இன்னும் பல விரும்மத்தகாத செயல்கள் கல்முனையில் அரங்கேற்றப்படும் தருணத்தில் தமிழ் மக்கள் ஒரு கயிற்றின் நார் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும். இந்தத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம் உலகிற்குச் சொல்லும்.
ஆகவே தமிழர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் கல்முனைத் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வது அவசியமாகும் என்றார்.

/div>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்