“காகிதபட்டம்” குறும்படத்தின் ரீசர் சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டது…(காணொளி இணைப்பு)

இளம் இயக்குனரும் சமுகப்பணி பட்டபாடநெறி மாணவனுமான ருவுதரன் சந்திரப்பிள்ளையின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் மூன்றாவது குறும் படமான “காகிதபட்டம்” எனும் குறும்படத்தின் ரீசர் சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

உடைந்த கனவுகள், மீசை என்பவற்றை போன்று இந்தப்படமும் சமுகத்திற்கு நல்லதகவலை எத்திவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு வடிமைப்பினை கார்த்திபனும் படத்தொகுப்பினையாசிர் நிசார்தீனும் ஔிப்பதிவினை அஜேய்ரேமினாத்தும் மேற்கொண்டுள்ளனர்.

சமுகப்பணி பட்ட மாணவர்களின் நடிப்பில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அம்மா கிரியேசன் தயாரித்து வழங்குகிறது.இப்படம் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என படக்குழுதெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்