பிரித்தானிய நாடாளுமன்ற இணைய வலையமைப்பில் இருந்து ஆபாச இணையத் தளங்களிற்குச் செல்ல முயற்சி!

பிரித்தானிய நாடாளுமன்ற இணையத்தள வலையமைப்பில் இருந்து ஆபாச இணையத்தளங்களிற்குச் செல்வதற்குப் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாடாளுமன்ற இணையத்தள வை-பை வலையமைப்பில் இருந்தே ஒரு நாளிற்கு 160 தடைவைகளுக்கு மேற்பட்ட தடவைகள் குறித்த ஆபாச இணையத்தளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதி வரையில் 24,400 தடைவைகளுக்கு மேல் நுழைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றத்திலுள்ள குறித்த இணைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அலுவலக ஊழியர்களுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அரசியல் நண்பர் தாமியன் கிரீனின் அலுவலகத்தின் கணனிகளில் ஆபாச தளங்களுக்கு சென்றமை குறித்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் பாலியல் குற்றச்சாட்டில் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்