சச்சின் குடும்பத்திற்கு வந்த சிக்கல்! – சாராவின் பெயரை பச்சை குத்தியவர் கைது

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவிற்கு தொலைபேசி மூலம் திருமணத் தொல்லை கொடுத்து வந்தவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தேப்குமார் எனப்படும் சந்தேகநபரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தற்செயலாக சாராவை பார்த்துள்ள சந்தேகநபர் சாராவின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொண்டு அதனூடாக அவருக்கு திருமணத்தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸாரிடம் சாரா முறைப்பாடு ஒன்றினைபதிவு செய்ததைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மித்னாபூரில் வைத்து சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது ”சாரா மீது தான் அளவு கடந்த நேசம் கொண்டுள்ளதாகவும், அதன்காரணமாகவே அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

அதேபோல சாராவின் பெயரையும் தன் கையில் பச்சைக்குத்தி தன்காதலை வெளிப்படுத்த தேப்குமார் முயற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தேப்குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், அதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவரின் குடும்பத்தார் பொலிஸாரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்