கோஹ்லியின் செயற்பாட்டால் தீக்குளித்த இந்தியர்!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது கோஹ்லி சிறப்பாக துடுப்பெடுத்தாடாமல் ஆட்டமிழந்த காரணத்தினால் ரசிகர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சொந்தமண்ணில் ஆடியது போல சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

குறித்த அணிகளுக்கு எதிரான முதலாவது போட்டியின்போது கோஹ்லி 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். இதனால் மத்திய பிரதேசத்தினைச் சேர்ந்த பாபுலால் (வயது 65) சோகத்தில் தீக்குளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பலமாக தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டபோது “நான் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தேன். இதன்போது கோஹ்லியின் ஆட்டமிழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனால்  தீக்குளித்தேன்” என பாபுலால் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, சொந்த மண்ணில் இரட்டைச்சதங்களை அடித்த கோஹ்லி தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்ட காரணத்தினால் அவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்