பிறந்த ஆண்டை மாற்றுகிறார் கிம் யொங்- உன்

இருமொழி கொண்ட இலங்கையில் தனிச் சிங்களச் சட்டத்தை தோற்றுவித்த S.W.R.D. பண்டார நாயக்கவின் பிறந்த நாளில் தான், உலகின் பலத்த சர்ச்சைக்குரிய வட கொரிய அதிபர் கிம் யொங்க்- உன்னும் பிறந்துள்ளார். அவரின் பிறந்த நாள் இன்றாகும்.

ஆனால் அவரின் பிறந்த ஆண்டு எது என்பதில் தான் குழப்பங்கள் நிலவுகின்றன. அவரின் உண்மையான பிறந்த ஆண்டு மாற்றப்படிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிம் யொங்- உன் இன் பாட்டனாரினதும் தந்தையினதும் பிறப்பாண்டுகளுக்கு ஏற்ற வகையில் அவரின் பிறப்பு ஆண்டும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

கிம் யொங்- உன் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பிறந்தாக நம்பப்படுகிறது. ஆனால், வட கொரியாவின் ஆட்சி அதிகார பிரசாரப் பிரிவு கிம் யொங்க்- உன்னின் பிறந்த ஆண்டை 1982 ஆக அறிவிக்கக் காத்திருப்பதாக விமர்சகர்கள் ஊகிக்கிறார்கள்.

அப்படி அறிவிப்பதன் மூலம் தனது பாட்டனார் பிறந்து சரியாக 70 ஆண்டுகளின் பின்னரும், உன்னின் தந்தை கிம் யொங்க் இல் பிறந்து சரியாக 40 ஆண்டுகளின் பின்னரும் கிம் யொங்- உன் பிறந்ததாக காட்ட முடியும் எனக் கருதப்படுகிறது.

வட கொரியாவின் சில இடங்களில் அதிபரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்ட போதிலும், இத்தினத்தை வட கொரியா விடுமுறை தினமாக அறிவிக்கவில்லை. முன்னாள் ஆட்சியாளர்களான உன்னின் தந்தை, மற்றும் பாட்டனாரின் பிறந்த தினங்களும் விடுமுறை தினங்களாக இருந்ததில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்