பிணைமுறி அறிக்கையால் சு.க. – ஐ.தே.க. கடும் மோதல்!

பிணைமுறி மோசடியின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்குமிடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம,
“பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவர்களுக்கு தண்டணையளிக்க புதிய சட்டமொன்றைக் கொண்டுவர  நாடாளுமன்றத்தில் ஏகமனதான வாக்குகள் கிடைக்கும்.
பிணைமுறி மோசடி தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எவரையும் குற்றம் சுமத்தமுடியாது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுடனான விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.  இதன்போது, குறித்த அறிக்கை தொடர்பில் கோரப்பட்டுள்ள நாடாளுமன்ற விவாதம் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது” – என்றார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,
“பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் போலியானவை. நானோ, பிரதமரோ எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்பதை நிச்சயம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.
பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பிரதமர் கோரியுள்ளார். அந்த அறிக்கை கிடைத்தவுடன் அது குறித்த எமது நிலைப்பாட்டை வெளியிடுவேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்