அன்றும் இன்றும் என்றும் நீங்கள்தான் ‘மிஸ்டர் கிளின்’! – ரணிலைப் புகழ்ந்து பேசிய ராஜித

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் மிஸ்டர் கிளினாகவே இருக்கின்றார். அவர் தூய்மையானவர் என்பதற்குரிய சான்றிதழை ஜனாதிபதி ஆணைக்குழுவே வழங்கிவிட்டது.”
– இவ்வாறு  அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.
ஐ.தே.க. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர் இது பற்றி மேலும் கூறியவை வருமாறு:-
“கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. அவை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படாததாலேயே இன்று அந்தக் கூட்டம் பிணைமுறி மோசடி தொடர்பில் பேசுகின்றது.
மிக் விமான ஊழலை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த படுகொலை செய்யப்பட்டார். இதற்காக இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, படுகொலை புரிபவர்களை எப்படி இராணுவம் என்று சொல்வது? கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ராஜபக்ஷ கூட்டமே இன்று ஊழல் பற்றிக் கதைக்கின்றது.
எவர் என்ன சொன்னாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘மிஸ்டர் கிளின்’தான். இல்லையென்று எவராலும் சொல்லமுடியாது. பிரதமர் நல்லவர் என்பதற்கான சான்றிதழை ஜனாதிபதி ஆணைக்குழுவே வழங்கிவிட்டது.
நல்லாட்சியையும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் நாம் பாதுகாக்கவேண்டும். அது எல்லோரினதும் கடமையாகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்