சட்டமா அதிபரின் அதிரடி அறிவிப்பு இரு வாரங்களில்!

சட்டமா அதிபரின் அதிரடி அறிவிப்பு இரு வாரங்களில்!
பிணைமுறி மோசடியாளர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் எடுக்கவுள்ள சட்ட நவடிக்கைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பார் என்று அறியமுடிகின்றது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி  ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இம்மாதம் 3ஆம் திகதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். எனினும், அதற்கு முன்னதாக 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே குறித்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கையளித்திருந்தார்.
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் மூவர் அடங்கிய குழு இந்த அறிக்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மோசடிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை் குறித்து இக்குழு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளது.
………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்