கிளி/இராமநாதாபுரம் மகா வித்தியாலயத்தில் புதிய கடினப்பந்து ஆடுகளம் இரணைமடு விமானப்படையினரால் அமைப்பு.

மேற்படி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் கடந்த மாதத்தில் வலயக்கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வரலாற்றில் முதல்தடவையாக கடினப்பந்து துடுப்பாட்ட பயிற்சிகள் அதிபரினதும் பழைய மாணவர்களதும் வேண்டுகோளுக்கு இணங்க கிளிநொச்சி மாவட்ட பாடசாலை துடுப்பாட்ட பயிற்சியாளரினால் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலைக்கு இலங்கை துடுப்பாட்ட சபையின் துடுப்பாட்ட பயிற்சியாளர்களுக்கு பொறுப்பான முகாமையாளர், வடக்கு மாகாண துடுப்பாட்ட பயிற்சியாளர் விஜயம் செய்ததுடன் ஒருபகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கியிருந்தனர்.எமது மாவட்ட துடுப்பாட்ட சம்மேளனமும் ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கியிருந்தனர். அவற்றை வைத்து பழைய மாணவர்களது உதவியுடன் மாவட்ட பாடசாலைப்பயிற்சியாளரினால் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது ஆடுகளம் தேவைப்பட்ட நிலையில் இரணைமடு விமானப்படையினரால் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா(250,000) பெறுமதியான சிறந்த ஆடுகளம் விமான படைதளத்தின் கட்டளை அதிகாரி நானயக்கார அவர்களின் நேரடி மேற்ப்பார்வையில் அமைக்கப்பட்டு அவரால் இன்று (08/01/2018) பாடசாலை அதிபர் திரு MCL .மனுவல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்