கட்சி தொடக்கம் இப்போது இல்லை: மீண்டும் குழப்பும் ரஜினி..

ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். எல்லா இடங்களிலும் விருந்து கொண்டாட்டம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு ஆன்லைனில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா “பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில், ரஜினி கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பார்” என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி ரஜினி கட்சி தொடங்குவார்” என்றார். ரஜினியின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன், “கட்சி பெயர், கொடி, சின்னம், கொள்கை எல்லாம் தயார். விரைவில் அதனை ரஜினி முறைப்படி அறிவிப்பார்” என்றார்.

இந்த நிலையில் மலேசிய கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பிய ரஜினியிடம், கட்சி பெயர், கொடி எப்போது? கொள்கை என்ன? எதிர்கால திட்டம் என்ன? எத்தனை பேர் இதுவரை உறுப்பினர்களாகி உள்ளனர், பாபா முத்திரை தான் சின்னமா? என பல கேள்விகளை சரமாரியாக பத்திரிகையாளர்கள் கேட்டனர். எந்த கேள்விக்கும் பதிலளிக்காத ரஜினி, “இப்போதைக்கு இல்லை” என்று மட்டும் கூறிவிட்டு வேகமாக சென்று விட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்