அமைதி காக்கும் ‘விஸ்வாசம்’ படக்குழு.

சத்யஜோதி தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிக்க உள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ஐம்பது நாட்கள் ஆகப் போகிறது. ஆனாலும், படம் பற்றிய அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார்கள், படத்தின் கதாநாயகி யார், வில்லன் யார், மற்ற நட்சத்திரங்கள் யார் என்பது பற்றி படக்குழுவினரிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. அதே சமயம், அஜித் இந்தப் படத்தில் இளமையான தோற்றத்தில் நடிப்பதால் அதற்காக பிரத்யேகமாக உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று மட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், இசையமைப்பாளர் மற்றும் மற்ற நட்சத்திரங்கள் விஷயத்தில் கொஞ்சம் இழுபறி நீடிப்பதால் படம் ஆரம்பமாவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதிலும் அஜித் படம் என்றாலே நாள், நேரம், நட்சத்திரம் பார்த்துத்தான் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடுவார்கள். அதனால், பொங்கல் முடிந்த பிறகு இது பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதக் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்