மீசாலையில் பெருமைக்குரியது மாம்பழம்…….

ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இனிய தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது.

அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது.

இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன.

இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். மீசாலை மாம்பழமானது தரத்தாலும்இ சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்