நான்கு சிறுவர்களை தீக்கிரையாக்கிய கோர விபத்து!

நான்கு சிறுவர்களை தீக்கிரையாக்கிய கோர விபத்து!

கனடாவின் நோவா ஸ்கொடியா பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் வீடு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நான்கு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

விரைவாக தீ பரவியமையினால் அங்கிருந்த நான்கு சிறுவர்களும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருவர் மட்டுமே இந்த விபத்தில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்டவுடன் உடனடியாக தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீவிபத்து ஏற்பட்ட வீடு நகரில் இருந்து சுமார் 260 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றடையும் முன்னரே குறித்த வீடு முற்றிலுமாக தீக்கிரையாகிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்