துறைமுக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்தில் பணிபுரிகின்ற 438 ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஒருபகுதி சீன நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தாகியது.

இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இலங்கை தேசியக் கொடியுடன் சீன நாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அந்த துறைமுகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் களமிறங்கினர்.

இந்தப் போராட்டம் நேற்று வரை 40ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் இதுவரை தகுந்த பதில் அளிக்கவில்லை என்று ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் வேறு வழியின்றி தங்களுக்கு தொழில் நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்