பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின்துப்பாக்கியை திருடியவர் சிக்கினார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின்துப்பாக்கியை திருடியவர் சிக்கினார்.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் ரீ. 56 ரக துப்பாக்கியை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 07ம் திகதி கற்பிட்டி துடாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம், மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 02 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடந்த 07ம் திகதி கற்பிட்டி துடாவ பிரதேசத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக சென்றுள்ளனர்.

இதன்போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் ரீ. 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படுகின்ற 30 தோட்டாக்களையும் திருடிக் கொண்டு லொறி ஒன்றில் சந்தேகநபர்கள் சென்றுள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்