தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஆறு பேரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது ஒரு சந்தேகநபர் ஒரு இலட்சம் ருபா ரொக்கப் பிணையும், 10 இலட்சம் ருபா பெறுமதியான சரிரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து சந்தேகநபர்களும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை விசாரணைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக அல்லது சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக நீதிமன்றத்திற்கு தெரிய வந்தால் வழக்கு முடியும் வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 12ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்