செல்வராகவன் படத்துக்கு அப்புறம் இவர்தான் டைரக்டர்… சூர்யா உறுதி!

சூர்யா நடிக்கவிருக்கும் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘சூர்யா 36’ படத்தின் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தில் கே.வி.ஆனந்துடன் இணைய இருப்பதாகக் கூறியுள்ளார் சூர்யா.

பொங்கலுக்கு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தீபாவளிக்கு அடுத்த படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். ‘சூர்யா 36’ படத்தின் ஷூட்டிங் பொங்கல் முதல் தொடங்குகிறது.

சூர்யா ஜோடி ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ‘சூர்யா 36’ படத்தின் நாயகிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூர்யா 36’ படத்தின் பூஜை கடந்த ஜனவரி 1 அன்று நடந்தது. இந்நிலையில் அடுத்த பட டைரக்டர் யார் எனக் கூறியுள்ளார் சூர்யா.

தானா சேர்ந்த கூட்டம் ப்ரொமோஷன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இப்படம் தெலுங்கில் ‘கேங்’ என பெயரில் வெளியாவதால் ஹதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சூர்யா.

அந்தச் சந்திப்பில் சூர்யாவின் அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு, “செல்வராகவன் சார் படம் முடிவடைந்தவுடன் மீண்டும் கே.வி.ஆனந்த் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதன் மூலம் மீண்டும் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

மேலும், இயக்குநர் ஹரி மற்றும் விக்ரம் குமார் இருவரோடும் அடுத்த படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் சூர்யா. சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி படத்தை தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். லைகா நிறுவனம் தான் இப்படத்தைத் தயாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்