போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் கைது

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் கைது

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 09 போலி 5000 ரூபா நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை மற்றும் பெரலபணாதரை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்