பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தினேஷிடம் ஒப்படைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்புகள் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடி என்றும் இதற்குப் பொறுப்பானவர்களின் பட்டியலில் பிரதமரே முதலிடத்தில் இருப்பதாகவும் ஒன்றிணைந்த எதிரணி சுட்டிக்காட்டியது.

எனவே, இதற்கு பொறுப்பான பிரதமரோ, அமைச்சர்களோ இந்தப் பதவிகளை வகிப்பதற்கு தார்மீக ரீதியில் உரிமையற்றவர்கள் என்றும் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும், அல்லது ஜனாதிபதி அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணி ஏற்கனவே வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்