இறந்த‌ மூதாட்டியின் ச‌டலத்தை பாதுகாத்த நாய்! நெகிழ்ச்சியான சம்பவம்

இறந்த‌ மூதாட்டியின் ச‌டலத்தை பாதுகாத்த நாய்! நெகிழ்ச்சியான சம்பவம்

உயிரிழந்த 70 வயதான மூதாட்டி ஒருவரிடன் சடலத்தை நாய்யொன்று பாதுகாத்து வந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதுளை – நெலும்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அந்த வீட்டில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரின் சடலத்திற்கு அருகில் நாயொன்று காவல் காத்து வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். குறித்த மூதாட்டி உயிரிழந்து சில நாட்கள் கடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், பதுளை நீதவான் ஆனந்த மொரகொடவின் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றதுடன், சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்