காதல் நாயகன் எந்த ராசிகளை குறிவைத்துள்ளார் தெரியுமா?

காதல் நாயகன் எந்த ராசிகளை குறிவைத்துள்ளார் தெரியுமா?

காதல் நாயகன் இந்த ராசியின் மீது குறி வைத்துள்ளார்? அவர்களுக்கு ராஜயோகம்!யாரை பாடாய் படுத்த போகிறார்.!

காதலுக்கு கண் இல்லையா என்று கேட்பார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காதல் கிரகம் சுக்கிரனை வைத்துதான் இந்த வார்த்தையே வந்துள்ளது.

சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் ஒருவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும்.

நமக்கு அழகை, வசீகரத்தை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகமும் இது தான். அதிர்ஷ்டத்தை வழங்குவதும் சுக்கிரனின் பார்வையே. எனவேதான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து உனக்கு சுக்கிரதிசையா என்று கேட்கின்றனர்.

சரி.. யார் ராசியில் அவரின் ஆதிக்கம் அதிகம் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளுவோம்..

மேஷம்

மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் அமைந்தால்,அவரது பெயர் பெண்களால் கெடும். ஏகப்பட்ட சச்சரவுகளை வாழ்வில் சந்திக்க நேரும். சுக்கிர திசையில் இது பல மடங்காகும். காரணம் மேஷம், விருச்சிகம் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற வீடாகும்.

துலாம்

சுக்கிரனுக்கு ரிஷபம்,துலாம் சொந்த வீடு. ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம், பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.

மிதுனம்

மிதுனத்தில் இருந்தால்,அவர் நிர்வாக திறமை கொண்டவராகவும் நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.அரசு வேலை கிடைத்து நிறைய பொருள் சேர்க்க வாய்ப்புண்டு. கடகத்தில் இருந்தால், அவர்களுக்கு அகங்காரம் இருக்கும்.இதனால் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சிலருக்கு இரு தாரங்கள் அமைந்து துன்பப்படும் சூழ்நிலையும் உண்டாகும்.

சிம்மம், கன்னி

சிம்மம், கன்னி சிம்மத்தில் இருந்தால் மனைவி மூலம் நிறைய வருமானம் வரும்.இவரை விட இவர் மனைவி புகழ்பெற்றவராக இருப்பார்.

பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம். நீச வீடான கன்னியில் சுக்கிரன் அமைந்தால் ராசிக்காரர் ஏழ்மை நிலை ஏற்படும். அதே நேரத்தில் நீசபங்கமடைந்து விட்டால் அவருக்கு ராஜயோகம் கூடி வரும்.

மகரம், கும்பம்

மகரம் கும்பம் சனியின் வீடான மகரம்,கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் தப்பான ஆசை கொண்டவராக இருப்பார். சனி வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பல பெண்களிடம் பழக்கம் ஏற்பட வாய்ப்புண்டாகும். இல்லற வாழ்வு இதமாக இருக்காது.

மீனம்

மீனராசியில் சுக்கிரன் தனது உச்ச வீடான மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ராசிக்கார ஏதாவது ஒரு கலையில் வல்லவராக இருப்பார்.அதன் மூலம் புகழும்,செல்வாக்கும் பெறுவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்