சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தால் மரண தண்டனை

சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தால் மரண தண்டனை

இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில், இந்த சட்ட திருத்தத்தின் பிரகாரம் சட்டவிரோத மதுபானம் உற்பத்திசெய்கின்றவர்களுக்கு 10 லட்சம் இந்திய ரூபாய் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு உத்தரபிரதேஷ் மாநில ஆளுனர் தனது அங்கிகாரத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்