முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது

முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண கிரிக்கட் தொடரில் பங்குகொள்ளும் இலங்கை அணியின் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழாமில் வேகுபந்து வீச்சளார் சேஹான் மதுசங்க, தினேஸ் சந்திமால், குசல் மெண்டிஸ், வனிது ஹசரங்க மற்றும் லக்ஷன் சன்டகன் ஆகியோர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதோடு, லஹிரு திரிமன்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள்…
1. அஞ்சலோ மெத்தியூஸ்
2. உப்புல் தரங்க
3. தினேஸ் சந்திமால்
4. குசல் மெண்டிஸ்
5. அசேல குணவர்தன
6. நிரோஷன் திக்வெல்ல
7. தனுஸ்க குணதிலக்க
8. திஸர பெரேரா
9. நுவான் பிரதீப்
10. சேஹான் மதுசங்க
11. வனிது ஹசரங்க
12. லக்ஷான் சந்தகேன்
13. அகில தனஞ்சய
14. துஸ்மந்த சமீர

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்