புதிய மாநில தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

புதிய மாநில தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்நாடு அரசு தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் செய்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது சிக்கிம் மாநில அரசு, ரஹ்மானை அந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் அமைச்சருக்குரிய அனைத்து அந்தஸ்துகளும் இதன் மூலம் ரஹ்மானுக்கு கிடைக்கும்.

சிக்கிம் தலைநர் காங்டாக்கில் நேற்று நடந்த குளிர்காலத் திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், ரஹ்மானை, சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக பணியாற்றுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். அதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டர்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவிக்கையில்;

“சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் தந்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்