பொலநறுவையில் பால் பண்ணை: ஆராய வருகிறது பாகிஸ்தான் குழு

பொலநறுவையில் பால் பண்ணையொன்றை நிறுவுவது தொடர்பாக ஆராயும் வகையில் பாகிஸ்தானின் உயர்மட்ட நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பொன்றின்போது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது கோரிக்கைக்கு அமைய நாட்டில் நிலவிய உரத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உரிய நேரத்தில் உதவியமைக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாஹிட் கான் அப்பாஸி மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்