குட்டி இளவரசியின் முன்பள்ளிக் கல்வி

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்ட்டனின் புதல்வியான இளவரசி சாளற் (Charlotte)நேற்று (திங்கட்கிழமை) தனது முன்பள்ளிக் கல்வியை ஆரம்பித்துள்ளார்.

இரண்டு வயதான குட்டி இளவரசி, கென்சிங்கடன் அரண்மனைக்கு அருகிலுள்ள Willcocks முன்பள்ளியில் கல்வியைத் தொடர்கின்றார்.

இந்நிலையில், குட்டி இளவரசி தனது  தாயாருடன்  முன்பள்ளிக்குச் சென்றுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஒரு தவணைக்கு காலைவேளைக் கற்கைக்கு 3 ஆயிரத்து 50 பவுண்ட்ஸும் பகல்வேளைக் கற்கைக்கு ஆயிரத்து 800 பவுண்ட்ஸும் இவரிடமிருந்து அறவிடப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் நான்கு வயதுடைய இளவரசர் ஜோர்ஜ் தனது பாடசாலைக் கல்வியை தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள தோமஸ் பாடசாலையில் கடந்த வருடம் ஆரம்பித்தமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்