டெல்லியில் நிலவும் கடும் பனி: ரயில்-விமானப் போக்குவரத்தில் இடையூறு

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 45 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாகவும், 4 ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் தொடர்ந்து கடும் பனி கொட்டித்தீர்ப்பதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் தொடர் தடையேற்பட்டுவரும் நிலையில், இன்று  (செவ்வாய்க்கிழமை) 8 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பனிமூட்டம் காரணமாக வீடுகளற்று வீதியோரங்களில் வசிக்கும் ஏழைகள், நோய்களுக்கு உள்ளாகி, உணவின்றி குளிரில் விறைத்துபோய் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்