தனது மனைவியின் இறப்பை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

தனது மனைவியின் இறப்பை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்


மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் இறப்பை தாங்கமுடியாமல் அவர் இறந்த 4 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணன் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டில் மாரியம்மாள் என்பவருடன் திருமணம் நடந்தது.

மாரியம்மாளுக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் குழந்தை இல்லாத நிலையில் இருவரும் தங்களுக்குள் அதிக அளவு அன்பை பகிர்ந்துவந்துள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் நான்கு மாதத்துக்கு முன் வயிற்றில் உள்ள கட்டி பிரச்சனை காரணமாக இறந்துபோனார்.

இந்தச் சோகத்தைத் தாங்கமுடியாமல் கிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்த கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்