கணவரை பிரிந்து தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் மகனை கொன்ற கொடூரன்!!

கணவரை பிரிந்து தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் மகனை கொன்ற கொடூரன்!!

பள்ளி மாணவனின் தாய் கணவரை பிரிந்து தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் மகனை கொலை செய்த ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பரசுராம் – சவிதா தம்பதியின் மகன் பரத்.

பள்ளி மாணவரான பரத் பள்ளிக்கூடம் முடிந்து பிட்டோ என்ற ஆசிரியரிடம் டியூசன் வகுப்பு படித்து வந்தார்.

ஆனால் பிட்டோ, பரத்தின் தாய் சவீதாவை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் மகன் படிக்கும் டியூசன் வகுப்பை சவீதா நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடத்துக்கு போன பரத் மாலையில் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பரத்தின் தந்தை பரசுராம் மகனை எங்கு தேடியும் கிடைக்காததால் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், சவீதா பொலிசாரிடம் கூறுகையில், சில தினங்களுக்கு முன்னர் பிட்டோ எனக்கு போன் செய்து கணவரை பிரிந்து தன்னுடன் வாழ வேண்டும் என மிரட்டியதாக கூறினார்.

இது சம்மந்தமாக பொலிசார் நடத்திய விசாரணையில் ஷூ லேசால் பரத் கழுத்தை நெரித்து பிட்டோ கொலை செய்து சடலத்தை சாக்கு பையில் அடைத்து வைத்து தூர வீசியது தெரியந்தது.

சடலத்தை இரண்டு பள்ளி மாணவர்கள் பார்த்து பொலிசாரிடம் கூறியதையடுத்து

அதை கைப்பற்றிய பொலிசார் பிட்டோவை கைது செய்தார்கள்.

சடலத்தை பார்த்து பரத் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்