வெள்ளை முடியை கறுப்பாக்க இத ட்ரை பண்ணுங்க…

வெள்ளை முடியை கறுப்பாக்க இத ட்ரை பண்ணுங்க…

உலகில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை ‘நரை முடி’. இந்த நரை முடி வயதானவர்கள் மட்டும் இன்றி, இளம் தலைமுறையினரையும் அதிகம் பாதிக்கிறது. இத்தகைய தலையாய பிரச்னையை வீட்டிலேயே சரி செய்ய முடியும். வெள்ளை முடியை கருப்பாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:

  1. ஆப்பிள் சீடர் வினிகர் – 1/4 கப்
  2. சேஜ் இலைகள் – 1 கையளவு
  3. தண்ணீர் – 2 கப்

செய்முறை:

முதலில் 2கப் நீரை நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.  பின்னர் அந்த நீரில், சேஜ் இலைகளை இரண்டாக பிய்த்து போட்டு 20நிமிடம் ஊற  வைக்கவும். ஊறிய நீரை வடிகட்டி, அதில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

தலைக்கு குளித்து முடித்த பின், தலை முடியில் இந்த கலவையை ஸ்பிரே செய்ய வேண்டும்.  (ஆரம்பத்தில் ஆப்பிள் சீடர் வினிகரின் துருநாற்றம் வீசும். ஆனால் தலைமுடி உலர்ந்த பின் துறுநாற்றம் மறைந்து விடும்.) இந்த முறையை தொடர்ந்து செய்து வர நரைமுடி மறைவதுடன், முடியும் பட்டு போன்று மின்ன ஆரம்பிக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்