இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து வெற்றி

இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 ரி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெலிங்டன் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இரண்டாவது ஒருநாள் போட்டி வெல்சன் நகரில் நேற்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.இதன்படி அவ்வணி 50 ஓவர் முடிவில் 246 ஓட்டங்கள் எடுத்தது.

247 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய குப்தில்-வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து 47 ஓட்டங்கள் குவித்தார். 14 வது ஓவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் டக் வேர்த் லீவிஸ் விதி கடைப்பிடிக்கப்பட்டது. போட்டி 25 ஓவராக குறைக்கப்பட்டு 151 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ரோஸ் டெய்லர் – குப்தில் ஜோடி சிறப்பாக ஆடினர். 23.5 ஓவர் முடிவில் 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்