ரஹானேவை நீக்கி ரோஹித்தை தேர்வு செய்தது ஏன்? கோஹ்லி பதில்

ரோஹித் சர்மா மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோருக்கிடையிலான நடப்பு திறமையை மதிப்பிட்டே, தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வு இடம்பெற்றதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ரஹானேயை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை தேர்வு செய்தது ஏன்? என ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னைய 3 போட்டிகளில் ஓட்டங்கள் குவித்திருந்தார். மேலும் நன்றாக விளையாடினார்.

கிரிக்கெட் வீரரின் நடப்பு திறமையை வைத்தே அணித்தேர்வு முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில்தான் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்